உஷார்... இன்று 16 மின்சார ரயில்கள் ரத்து... மாற்று ஏற்பாடு செய்துக்கோங்க!

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 5.40, 10.15, பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து பிற்பகல் 12.35, 1,15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35, பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, 4.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறப்பு ரயில்கள் (இன்று மட்டும்) சென்னை கடற்கரை-பொன்னேரி மதியம் 12.40, 2.40 மணி. பொன்னேரி-சென்டிரல் மதியம் 1.18, 3.33 மணி. மீஞ்சூர்-சென்டிரல் மதியம் 2.59, மாலை 4.14 மணி. சென்டிரல்-மீஞ்சூர் மதியம் 1.40 மணி. சென்டிரல்-பொன்னேரி காலை 10.30 மணி. சென்டிரல்-மீஞ்சூர் காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!