உஷார்... சென்னை, சென்னை புறநகர் வழிதடத்தில் 25 மின்சார ரயில்கள் ரத்து.. மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே இன்று  25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே நாளை மார்ச் 13ம் தேதி மற்றும் மார்ச் 15ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் 9.55, 11.25, மதியம் 12, 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35, 10.15, மதியம் 12.10,1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதிகளில் காலை 11.45, மதியம் 1.15, 3.10 இரவு 9 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி: ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்

மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web