உஷார்... விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்!

 
 உஷார்... விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்!
சென்னையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க 200 இடங்களில் ஏ.ஐ தொழில் நுட்பத்துடன் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக்களை நிறுவ போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விபத்து, விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீசார் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். 

 உஷார்... விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்!

அபராதம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கே குறுந் தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தானியங்கி கேமராக்களும், விதி மீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அதுவாகவே அபராதம் விதித்து விடுகிறது. வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விதி மீறல் தொடர்பான புகைப்படங்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. 

அடுத்த கட்டமாக சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் முறையில் ஏ.ஐ தொழில் நுட்பத்தையும் புகுத்தி உள்ளனர். முதற்கட்டமாக சென்னையில் இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உட்பட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏஐ தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

 உஷார்... விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்!
அடுத்த கட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web