உஷார்... இன்று முதல் ஏடிஎம் விதிமுறைகளில் அமலுக்கு வந்த மாற்றங்கள்... எதற்கு எல்லாம் அதிக கட்டணம்... முழு விபரம்!

 
ஏடிஎம்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. இன்று முதல் ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. இனி இதற்கெல்லாம் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும், ஏற்கெனவே வசூலிக்கப்படும் கட்டணங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இனி வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களுக்கும், பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்.

ஏடிஎம்

மெட்ரோ நகரங்களில், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 3  இலவச பரிவர்த்தனைகளைப் பெறலாம். பிற நகரங்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகள் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புகளை மீறினால், வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதுவும் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும். சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரிகளும் தனியே வசூலிக்கப்படும்.

ஏடிஎம்

HDFC வங்கியின் வலைத்தளத்தில்  மே 1, 2025 முதல், இலவச வரம்பைத் தாண்டிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 21 + வரிகள் என்பதில் இருந்து ரூ. 23 + வரிகள் ஆக உயர்கிறது. இண்டஸ்இண்ட் வங்கி வலைத்தளத்தின்படி, “இன்று மே 1, 2025 முதல் இண்டஸ்இண்ட் வங்கி அல்லாத பிற ஏடிஎம்களில் இலவச வரம்புகளுக்கு அப்பால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 23 வசூலிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web