உஷார்... தினமும் பிரட் சாப்பிடறீங்களா? மருத்துவரின் எச்சரிக்கை பதிவு!

 
பிரட்

இன்றைய அவசர உலகில் பெரும்பாலான மக்களின் காலை நேர உணவு பிரட் வகைகள் தான்.  வேலைக்கு செல்லும் அவசர நேரத்தில் என்ன சமைக்கலாம் என யோசிக்க யாருக்கும் நேரமில்லை.  இதனால் பிரட் வெரைட்டிகள் மூலம் வயிற்றை நிறைத்து கொள்கின்றனர். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா என்ற மருத்துவர் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   வெள்ளை பிரெட் மட்டுமின்றி, மல்டிகிரெயின் பிரெட் உள்ளிட்ட அனைத்து வகை பிரெட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

பிரட்

தினமும் பிரெட் சாப்பிடுவதால் Auto Brewery Syndrome உருவாகும். இது செரிமானமாகத பிரெட் குடலில் எத்தனால் எனும் ஆல்கஹாலை உருவாக்கி, உடலை போதை நிலைக்கு கொண்டு செல்கிறது என கூறினார். அதோடு அவரது மகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த அவர், “திடீரென மயக்கம், தலைசுற்றல் ஆகிய அறிகுறிகள் வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிறகு பசிக்கும்போது அதிகமாக பிரெட் சாப்பிட்டதால்தான் Auto Brewery Syndrome ஏற்பட்டது என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டறிந்தோம்,” என விளக்கம் அளித்துள்ளார்.  

பிரட்
எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே பிரெட்டை சாப்பிட வேண்டும் என்ற அவர் , குடல் சுத்தமாக இருக்க காலை அல்லது இரவில் இஸப்கோல் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.  மேலும் தினசரி உணவில் பிரெட் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?