அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
மழை

 தமிழகத்தின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த மழை இன்றும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத்  தெரிவித்துள்ளது.

மழை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில்  15 மாவட்டங்களில்  அதாவது திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்து பின்னர் கடும்பனிப்பொழிவு காணப்பட்டது. இதனையடுத்து தற்போது பனிப்பொழிவு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரம் பகல் நேரங்களில் வெயிலும் வாட்டத்தொடங்கியது. எனினும் வெப்ப அலையால் பெரியளவில் பாதிப்பு வரவில்லை. இதனால் மழை குறைந்தது என்றே கருதப்பட்டது. எனினும் சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web