17 மாவட்டங்களுக்கு அலெர்ட்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

தமிழகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, கோவை ,  திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்றும், நாளையும் வானிலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் மழை


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை,தென்காசி, கன்னியாகுமரி. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web