உஷார்... ஏடிஎம் முதல் ரயில் டிக்கெட் வரை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள்!

 
மே 1

இன்று மே 1ம் தேதி முதல் தமிழகத்தில் இந்த விஷயங்களில் எல்லாம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கோங்க. அவசரத்துல பழைய ஞாபகத்திலேயே இருந்து விட்டு, பணத்தையும், நேரத்தையும் வீணாக்கி சிரமத்திற்குள்ளாகாதீங்க.

இன்று முதல் ATM கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. அதே போன்று ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளிலும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. சமையல் சிலிண்டர் விலை மாற்றம் போன்ற பல விஷயங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. 

ஏடிஎம்

ATM கட்டண அதிகரிப்பு:

இன்று மே 1ம் தேதி முதல் ATM பயன்படுத்தும் நபர்கள் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ATM கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில், இந்த புதிய நடைமுறைப்படி, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, வேறொரு வங்கியின் ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.19 ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை தாண்டினால், மே 1 முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ரயில் டிக்கெட்:

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்று முதல் காத்திருப்பு டிக்கெட்டில் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது. முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் உடனடி ஒதுக்கீடு கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும்.

ரயில் டிக்கெட்

டோல் கட்டணங்கள்:

சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் GNSS முறை சோதனை ஓட்ட முறையில் அமலுக்கு வருகிறது. இந்த சோதனை முறை வெற்றி பெற்றால் நாடு முழுவதும் செயல்படுத்தபடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அதேபோல், மே 1 ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், இன்னும் சில முக்கிய நடைமுறைகளிலும் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web