உஷார்... நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகரித்துள்ளது. இதன்  காரணமாக ஒருசில இடங்களில் இயல்பில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் உயர்ந்து பதிவாகியுள்ளது.

மழை

இந்நிலையில் பூமத்திய ரேகையை ஒட்டிய வட கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 11ம் ேததியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

கன மழை

விருதுநகர் சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web