உஷார்... அப்பாவோட ப்ரெண்ட் பேசறேன்... சிறுமியிடம் ரூ.18,000 பணம் பறிக்க முயன்ற நபர்!

இன்றைய அவசர யுகத்தில் சமூக வலைதளங்களில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தன்னை ஏமாற்ற முயற்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உங்கள் தந்தையின் நண்பர் பேசுகிறேன் எனக் கூறினார். அத்துடன் உங்களுடைய தந்தை வங்கி கணக்கில் ரூ. 12000 அனுப்ப சொன்னதாக கூறினார்.
அதனை கேட்ட அந்த இளம் பெண் அவரை நம்ப வைக்கும் வகையில் பதில் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அந்த நபர் முதலில் ரூ. 10,000 பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்ததா? எனக் கேட்டார். அதற்கு சிறுமி போலி குறுஞ்செய்தி என்பதை அறிந்ததும் “வந்தது” என பதில் கூறினார்.
Kalesh prevented by girl while talking to Scammer pic.twitter.com/d8sNRwjASy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 13, 2025
அதன் பிறகு ரூ.2,000 அனுப்புவதற்கு பதிலாக அவர் ரூ.20,000 அனுப்பியதாக போலி குறுஞ்செய்தியை சிறுமிக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண்ணிடம் ரூ.2,000 வந்ததா? என்று கேட்டதற்கு, அந்தப் பெண் “இல்லை அங்கிள், ரூ.20,000 வந்ததாக கூறினார். அப்போது அந்த நபர் சிறுமியிடம் தவறுதலாக அனுப்பி விட்டேன், மீதி ரூ.18,000 பணத்தை திருப்பி அனுப்பி வை எனக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அந்தப் பெண் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு அவர் அனுப்பிய போலி குறுஞ்செய்தியை திருத்தம் செய்து அவருக்கே அனுப்பி வைத்தார்.
பின்னர் அங்கிள் பணம் வந்ததா என சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே கேட்கிறார். அதனை கேட்டு அதிர்ந்து போன அந்த நபர் சிறுமியை பாராட்டி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அந்த சிறுமி இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் சிறுமிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் “சிறந்த சிந்தனை” மற்றும் புத்திசாலித்தனத்தால் சிறுமி சிறப்பாக செயல்பட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!