உஷார்... தாய், மகன் கழுத்தறுத்து கொலை... அதிர வைத்த வீட்டு வேலைக்காரன்!

டெல்லியில் இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகர்-1 பகுதியில் நேற்றிரவு ஒரு வீட்டில் பெண் ஒருவரும், அவரது 14 வயது மகனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட வீட்டு வேலைக்காரனை, தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, நேற்று ஜூலை 2ம் தேதி இரவு 9:43 மணிக்கு லஜ்பத் நகர்-1ல் வசிக்கும் குல்தீப் (44) என்பவரிடமிருந்து PCR அழைப்பு வந்தது. தனது மனைவியும், மகனும் தனது செல்போன் அழைப்புகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கவில்லை என்றும், கதவிலும் படிக்கட்டுகளிலும் இரத்தக் கறைகள் இருப்பதாகவும் அவர் போலீசாருக்குத் தெரிவித்தார்.
உடனடியாக விசாரணை அதிகாரி (IO) மற்றும் SHO உடன் ஒரு போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.உள்ளே, பெண் மற்றும் சிறுவனின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலியானவர்கள் குல்தீப்பின் மனைவி ருச்சிகா சேவானி (42) மற்றும் அவரது மைனர் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ருச்சிகா தனது கணவருடன் சேர்ந்து லஜ்பத் நகர் சந்தையில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முகேஷ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பீகார் மாநிலம் ஹாஜிபூரில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தற்போது அமர் காலனியில் வசித்து வருகிறார்.
அவர் சேவானி குடும்பத்தின் துணிக் கடையில் ஓட்டுநராகவும், கடை உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார். முகேஷ் தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ருச்சிகா சேவானி அடிக்கடி திட்டியதால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பு தான் கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் முறையான விளக்கம் அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!