உஷார்.. இன்று முதல் வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தம்... சென்னைக்குள் வராது!

 
அரசு பேருந்து

உஷார் மக்களே... இன்று  முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள் செல்லாது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வர சரியான பேருந்து,  ரயில் வசதிகள் இல்லாமல், தூக்க கலக்கத்தைப் போக்கும் விதமாக கொஞ்சம் தூரம் வாக்கிங் சென்று விட்டு, அதிகாலை நேர அவஸ்தைகளை அனுபவித்து விட்டு அப்புறமாக உங்கள் சொந்த பந்தங்களைப் பார்க்க சென்னைக்குள் வாங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படி தான் இருக்கும். அதன் பின்னர் உங்களுக்கு இது பழகிவிடும். 

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு புதிய அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பேருந்து

இது குறித்து வெளியான அறிக்கையில், “தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை வழங்கி உள்ள பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று மார்ச் 4-ம் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் மாரடைப்பு!! பயணிகளை காப்பாற்றி,  உயிரை விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!!

இதுவரை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 589 பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 14 பேருந்துகள்  816 பயண நடைகள்  இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து எப்படி சென்னைக்குள் வருவது என்று யோசித்து, மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web