உஷார்... இன்று இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க மக்களே. மாதாந்திர  பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று ஜூன் 13ம் தேதி சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்று ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் சீரான் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

ரெட்ஹில்ஸ் பகுதியில் சோத்துப்பெரும்பேடு பகுதி, அல்லிமேடு, மேட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு பகுதி.  

முகப்பேர் பகுதிகளில்  மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், 6-வது பிளாக் மெயின் ராடு, சாதல்வார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதி. 
குன்றத்தூர் பகுதிகளில்  அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜயராஜா நகர், வழுதாளம்பேடு கிராண்ட் சிட்டி. கே.கே.நகர்: காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகயா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்ரபாணி தெரு, சக்கரபாணி தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர். 

கோவூர் பகுதியில்  அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயக தெரு, குன்றத்தூர் மணி ரோடு, அம்பேத்கர் தெரு. சோழிங்கநல்லூர் பிரிவு: கௌரிவாக்கம்- ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகர, வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபாங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, அல்ஃபாஸ் அவென்யூ, யுனைடெட் காலனி, சாய்ராம் நகர் மெயின் ரோடு மற்றும் பூங்கா, சித்தார்த் குடியிருப்புகள், அண்ணாமலை தெரு. 

ராஜகீழ்பாக்கம் பகுதியில்  பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட்ராமன் தெரு, மாருதி நகர் 2-வது மெயின்ரோடு, வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

மின் தடை
திருவான்மியூர் பகுதியில்  இந்திரா நகர், பெரியார் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜ் நகர், எல்பி சாலை, திருவள்ளூர் சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏஜிஎஸ் காலனி, சுவாமிநாதன் நகர், களத்துமேட்டு பகுதி, பிடிசி காலனி, வெங்கடேசன் அவென்யூ, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர். பல்லாவரம்: இந்திரா காந்தி சாலை, தண்டு மாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஓட்டல், மாலிக் தெரு, நாகரத்தின் தெரு, கண்ணபிரான் கோவில் தெரு, சென்னை சில்க்ஸ் ஒலிம்பியா மற்றும் அதுல்யா டவர்ஸ் பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது