உஷார்.. இன்ஸ்டாகிராமில் மோசடி... ரூ.3 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக வந்த விளம்பரத்தை நம்பி அந்த பெண் மேற்படி விளம்பர நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூபாய் 3 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் மருத்துவ உபகரணங்களை அனுப்பாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மேற்படி பெண் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டர்.
இதில், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பர நிறுவனத்தினரை கண்டறிந்து அவரது வங்கி கணக்கை முடக்கம் செய்து, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தை திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி மீட்கப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மேற்படி பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!