உஷார்... இன்று மாலை வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

 
மின்சார ரயில்
இன்று மார்ச் 9ம் தேதி மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக இன்று கூடுதல்  பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மார்ச் 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மின்சார ரயில்

சென்னை -கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, மார்ச் 9-ம் அன்று காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/திருமால்பூர்/அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web