உஷார்... திருமணத்திற்கு சம்மதிக்காத இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளர்!

 
பாலாஜி
சென்னையில், இளம்பெண் ஒருவரை, தன்னைத்  திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தி வந்த நீச்சல் பயிற்சியாளர், இளம்பெண் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில், அவரது ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஐபோன் உட்பட 3 செல்போன்களையும் பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையை சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர், தான் முதுகலை படித்து வருவதாகவும், தனக்கு நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி என்பவர் அறிமுகமாகி நண்பராக பழகி வந்த நிலையில், பாலாஜி தன்னை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்ட போது, தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, தனது ஆபாசமான வீடியோவை பதிவிட்டதாகவும், V-4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி பாலாஜி(39), த/பெ.பாண்டுரங்கன், பழனியம்மன் கோயில் 3வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை என்பவரைக் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி பாலாஜி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?