உஷார்... தகிக்கும் வெயில்... தவிக்கும் மக்கள்... தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, திருப்பத்தூரில் தலா 102 டிகிரி பதிவு!

 
வெயில்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 99.32 டிகிரி ஃபாரன்ஹீஅட் வரை வெயில் பதிவாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்து வரவிருக்கும் மூன்று நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வெயில்

நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதே போல் ஈரோட்டில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58 டிகிரி, கரூரில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

இனி அடுத்த வரவிருக்கும் ஐந்து நாட்களைப் பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கி 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதே போல தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web