உஷார்... நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை... என்னென்ன அறிகுறிகள்?!
சிங்கப்பூர், மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 257 பேர் சிகிச்சை பெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாலும் முககவசம், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, மற்றும் கட்டாயமாக சமூக இடைவெளி காப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட ஆசியாவின் ஒரு சில நாடுகளில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஜேஎன்-1 எனப்படும், ஓமிக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியர்கள் ஏற்கனவே கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுமா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஜேஎன் 1 வைரஸின் அறிகுறிகளாக,காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, திடீர் களைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
