உஷார்... இன்று கத்திரி வெயில் துவக்கம்... மே 28 வரை வாட்டி வதைக்கும்... பத்திரமா இருங்க!

 
வெயில்
இன்று மே 4ம் தேதி துவங்கும் கத்திரி வெயில் மே 28ம் தேதி வரை நீடிக்கிறது. மே மாதத்தில் 25 நாட்கள் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும்.  இந்தாண்டு இன்று மே 4 ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெயில்

தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்போதே பல்வேறு இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், இன்று மே 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  

அதேநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. வரும் வாரங்களில்  தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெயில் பெண்கள்

எனினும் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web