உஷார்... நாளை பராமரிப்பு பணிகளால் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!

 
 சிறப்பு ரயில்
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு -திருச்சி பாசஞ்சர் ரயில் (வண்டி எண்: 56106) நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். இந்த ரெயில் ஈரோடு- கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும். கரூர் -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்

பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16844) நாளை (வெள்ளிக்கிழமை) பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு குளித்தலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலானது பாலக்காடு- குளித்தலை இடையே மட்டுமே இயக்கப்படும். குளித்தலை -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16843) நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சி - கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயிலானது கரூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

திருச்சி கோட்டத்தில் திருவாரூர்- கொரடாச்சேரி இடையே நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண்: 76820) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூரில் நிறுத்தப்படும். இந்த ரயிலானது திருச்சி- திருவாரூர் இடையே மட்டுமே இயக்கப்படும்.

ரயில்

காரைக்காலில் இருந்து வழக்கமாக பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்- திருச்சி டெமு ரயில் (வண்டி எண்:16819) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4ம் தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவாரூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web