உஷார்... மே 12 வரை வெயில் சுட்டெரிக்கும்... பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?!

 
வெயில்
பத்திரமாக இருங்க மக்களே... வெயில் நேரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில், மே 12ம் தேதி வரையில் பொதுமக்கள் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவசியமில்லாமல் காலை 10 மனி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையில் கூடுதலாக இருக்கும்.

வெயில்

ஆகையால் யாரேனும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவர அணுகி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெயிலின் தாக்கம் குறைய எப்போதும் வீட்டில் இருக்கும் வீட்டு கதவை திறந்தே வைக்க வேண்டும். 

மொபைலை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அறையின் வெப்பநிலை காரணமாக ஏற்கனவே உங்களது மொபைல் சூடாக இருக்கும். 

வெயில்

அப்படியிருக்கும் போது சார்ஜ் போடும் போது கூடுதல் வெப்பம் காரணமாக மொபைல் வெடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்து வருகிறது. வெயிலின் பாதிப்பிலிருந்து தப்பிக்க பழச்சாறு, மோர், நீர் அதிகம்  எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

எளிதில் பற்றக் கூடிய இவற்றையெல்லாம் காரில் வைக்க கூடாது:
1. எரிவாயு பொருட்கள்
2. லைட்டர்கள்
3. கார்பனேற்றப்பட்ட பானங்கள்
4. வாசனை திரவியங்கள்
5. பேட்டரிகள்
6. காரில் பெட்ரோல் அல்லது டீசலை முழுவதுமாக நிரப்ப கூடாது.
7. காலை நேரங்களில் கார் பயணங்களை தவிர்ப்பது நல்லது
8. கார் டயரில் அதிக காற்று நிரப்ப கூடாது.
9. கார் ஜன்னல்கள் கொஞ்சம் திறந்திருக்க வேண்டும்.

அதிக வெயிலின் தாக்கம் காரணமாக ஊர்வன வகையைச் சேர்ந்த தேள், பாம்பு ஆகியவை நீர் நிலைகளை தேடி வெளியில் செல்லும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது. எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது. 

மின் மீட்டர்களை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தேவைக்கேற்ப மட்டும் ஏசியை பயன்படுத்த வேண்டும். ஏசியை வீட்டில் 24-25 டிகிரி செல்சியசில் வைத்திருக்க வேண்டும். உங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web