234 தொகுதிகளிலும் போட்டி.. தவெக விருப்ப மனு விநியோகம்.. முக்கிய அறிவிப்பு!

 
தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அக்கட்சியின் தேர்தல் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தவெக தற்போது வேட்பாளர் தேர்வுப் படலத்தைத் தொடங்கியுள்ளது.  பிப்ரவரி 6 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் துவங்குகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாளன்று நண்பகல் 12 மணி முதல் பெறலாம். பிப்ரவரி 14ம் தேதி சனிக்கிழமை வரையில் மனுக்கள் விநியோகிக்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் சென்னை, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

"ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள புஸ்ஸி ஆனந்த், விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கட்சி தொடங்கி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தவெக-வினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஸ்ஸி ஆனந்த்

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தயார் செய்யும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தலில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பிறகு, தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய விஜய் தலைமையில் ஒரு நேர்காணல் குழு அமைக்கப்பட வாய்ப்புள்ளது. 

தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் போவதாகக் கூறி வரும் விஜய், வேட்பாளர் தேர்வில் எந்த மாதிரியான அளவுகோல்களைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்பது மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!