மே 20ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் பேபி அறிவிப்பு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்ட்டில் தேசியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்ஏ. பேபி மதுரையில் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி, 'தூக்குமேடை' தியாகி பாலு இவர்களின் சிலைகளுக்கு கட்சி அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் ”வலிமையான கூட்டணி தேவை: நாட்டில் நரேந்திர மோடி -அமித் ஷா தலைமையிலான பாசிச ஆட்சி வேரூன்றியுள்ளது.ஜனநாயகம், மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில், 'எம்புரான்' திரைப்படத் தயாரிப்பாளர் மீது அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் பாசிச எண்ணத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற கூட்டணியே பாஜகவை தோற்கடிக்கக் காரணமானது. தமிழகத்தைப் போன்று பிற மாநிலங்களிலும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும்.

மே 20-ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். பாஜக ஆட்சியை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கவேண்டும். மதுரையில் நடந்த அகில இந்திய மாநாட்டுக்கு மிக உறுதுணையாக இருந்த தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
