திருச்செந்தூர் குடமுழுக்கில் பூஜைகள் அனைத்தும் தமிழில் நடைபெறும்... தமிழ்நாடு அரசு உத்தரவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் பூஜைகள் அனைத்தும் தமிழில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில் அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் யாகசாலையில் மந்திரங்கள் ஒதுவது தொடங்கி, திருமறை பாடுவது என பூஜைகள் அனைத்தும் தமிழில் நடைபெறும் என என உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!