தொட்டதெல்லாம் ஹிட் தான்... பொரிஞ்சு வெளியத் முதலீட்டுக்குப் பின்பு இந்த பென்னி பங்கு 5 சதவிகிதம் உயர்ந்தது!

 
எட்வென்ஸ்வா கட்டிடம்

எட்வென்ஸ்வா எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் வியாக்கிழமையன்று ரூபாய் 54.99 என்ற விலையில் வர்த்தகமாகி 5 சதவீத அப்பர் சர்க்யூட்டில் முடிந்தன. கடந்த 5 வர்த்தக அமர்வுகளில், பங்கு ரூபாய் 43.22 முதல் தற்போதைய நிலை வரை தோராயமாக 27 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. முதலீட்டாளர் பொரிஞ்சு வெளியத் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு பங்கு விலையில் இத்தகைய நகர்வு காணப்பட்டது. BSEல் கிடைக்கும் மொத்த ஒப்பந்தத் தரவுகளின்படி, 1.3 லட்சம் பங்குகள் சராசரியாக ரூபாய் 52.18 க்கு வாங்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தில் சுமார் 0.72 சதவிகிதப் பங்குகளுக்குச் சமமாகும்.

பொரிஞ்சு வெளியத்

ஒரு வருட வரம்பை வைத்து, பங்கு அதன் பங்குதாரர்களுக்கு ரூபாய் 19.58 முதல் தற்போதைய நிலைகள் வரை சுமார் 180 சதவிகித மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்திருக்கிறது. ஒருவர் இப்பங்குகளில் 1,00,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது ஒரு வருட காலத்திற்குள் 2,80,000 ரூபாயாக மாறியிருக்கும். எட்வென்ஸ்வா எண்டர்பிரைசஸ் லிமிடெட், முன்பு KLK எலக்ட்ரிக்கல் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது, இது இந்தியாவை தலமையிடமாகக் கொண்ட மின் சாதன உற்பத்தி நிறுவனமாகும், மின்சாரம் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. 

எட்வென்ஸ்வா

நிதிநிலைகளை பொறுத்தவரை நிறுவனம் அதன் வருவாயை ஓரளவு அதிகரித்து நிகரலாப எண்ணிக்கையை மேல்நோக்கி மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. 2ம் காலாண்டில் ரூபாய் 11.36 கோடியாக இருந்த வருவாய் மூன்றாம் காலாண்டில் ரூபாய் 12.24 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாப புள்ளிவிவரங்கள் Q2ல் ரூபாய் 1.45 கோடியிலிருந்து Q3ல் ரூபாய் 1.46 கோடியாக மாறியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web