இந்தியாவில் அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்... அமித்ஷா !

 
அமித்ஷா


 
 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 26ம் தேதி  சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில்  இந்தி மொழி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை.  இந்தி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தோழமையாக இருக்கும்  இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும் மொழி வளத்தையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அதே சமயம், இந்தி மற்ற மொழிகளை ஒடுக்காமல், அவற்றுடன் இணைந்து வளர வேண்டும் என கூறியுள்ளார்.  தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது. அமித்ஷா இந்தியாவில் அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.  

அமித்ஷா
ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.   இந்தி உட்பட எந்த மொழியும் மற்றவற்றை அழிக்கக் கூடாது . இந்தி மொழியை ஒரு இணைப்பு மொழியாகப் பயன்படுத்துவதன் மூலமாக  மாநிலங்களுக்கு இடையே தொடர்பை வலுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமித்ஷா
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்து எழுந்துள்ள எதிர்ப்புகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட அமித்ஷா, இந்தி கற்பது ஒரு விருப்பமாக இருக்க வேண்டும், கட்டாயமாக இருக்கக் கூடாது எனக் கூறினார். இருந்தாலும் இந்தியை எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை என  விளக்கம் கொடுத்த  அவர், தமிழ் உட்பட  பிற மொழிகளின் முக்கியத்துவத்தை மறுக்காமல், இந்தி அனைத்து மொழிகளுடனும் இணைந்து இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வளர்க்கும் எனவும் கூறியிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது