ஊரெல்லாம் திருமண பத்திரிக்கை கொடுத்தாச்சு... இளம்பெண் திடீர் தற்கொலை! போலீசார் விசாரணை!

 
ஜெயந்தி

சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கல்யாண பத்திரிக்கை கொடுத்தாச்சு. ஜெயந்தி தற்கொலை முடிவை தேடிக் கொண்ட அன்றைய தினம் கூட, அவரது பெற்றோர்கள் ஜெயந்தியின் கல்யாண பத்திரிக்கையை சொந்தக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தான் சென்றிருக்கிறார்கள். மாப்பிள்ளையையும் ஜெயந்திக்கு பிடித்து போயிற்று. ஜெயந்தியின் சம்மதம் கேட்டப்பிறகு தான் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், கடன் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால்,  ஜெயந்தி தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை தாம்பரத்தையடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் மதியழகன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதியழகனின் மகள் ஜெயந்தி (31). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  

ஜெயந்தி

திருமணத்தையொட்டி அவரது பெற்றோர், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, ஜெயந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது சகோதரர் நவீன் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தபோது, வெளியே கேட் மூடப்பட்டிருந்தது. 

இதனால், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சகோதரி ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தகவல் தெரிவித்ததும், தந்தை மதியழகன் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயந்தி

மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜெயந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு 31 லட்சம் ரூபாய் லோன் வாங்கி கட்டி வந்தது தெரிய வந்தது. மேலும், மார்ச் மாதம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கடன் அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web