3 நாட்களுக்கு அனைத்து ரயில்களும் ரத்து!! ரயில் பயணிகளே குறிச்சிக்கோங்க!!

 
ரயில்

ரயில்  வழித்தடங்களில் சிக்னல்கள் , தண்டவாளங்கள் ஆகியவை  குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படும்.ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு நாடு முழுவதும்  அனைத்து ரயில்வே தண்டவாளங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில்,  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இன்று முதல்  3 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இதனால் இவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்


இது குறித்து ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "ஈரோட்டிலிருந்து அதிகாலை 6.25 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்    மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ்  ரயில் ஜூன் 24,26,28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் ரயில்வே

அதேபோல பெங்களூரிலிருந்து காலை 8.45 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில்  மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் ஜூன் 26, 28   தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.  சென்னை சென்ட்ரலிலிருந்து ஜூன் 25 ம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மைசூரிலிருந்து ஜூன் 25 ம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹவுரா செல்லும் ரயில்  முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web