யாருடன் கூட்டணி? DMK Vs TVK? இன்று ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

 
தவெக திமுக

2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்குத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திக்கின்றனர்.

திமுக கூட்டணியில் நீடித்தாலும், வரும் தேர்தலில் 'கூட்டணி ஆட்சி' மற்றும் 'அதிகாரத்தில் பங்கு' என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். இதற்காகச் சுமார் 3 அமைச்சரவைப் பதவிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஸ்டாலின் ராகுல் காந்தி

திமுக அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் பட்சத்தில், வளர்ந்து வரும் சக்தியான நடிகர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஒரு பிரிவினர் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்யின் ரசிகர் பட்டாளம் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் காங்கிரஸுக்கு உதவும் என அவர்கள் கருதுகின்றனர்.

2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 25 இடங்களை விட, இந்த முறை 35 முதல் 40 இடங்கள் வரை கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா பவனில் நடைபெறும் இக்கூட்டத்தில்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆகியோர் சந்திக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!