தவெகவுக்கு செம மாஸ் சின்னம் ஒதுக்கீடு... எல்லோர் கையிலும் இருக்குமே?! உற்சாகத்தில் தொண்டர்கள்!

 
தவெக விஜய்

அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக), ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 'மோதிரம் சின்னத்தை' ஒதுக்கியுள்ளதாகத் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட இருப்பதால், கட்சிக்கு ஒரு நிரந்தரச் சின்னத்தைப் பெறுவதில் விஜய் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணைய விதிகளின்படி,  அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாங்கள் விரும்பும் 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விஜய்

அதன்படி, தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதில், ஏற்கனவே விஜய் தரப்பு அதிகம் எதிர்பார்த்திருந்த "ஆட்டோ சின்னம்", கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், அதைப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆட்டோ சின்னம் கிடைக்காத நிலையில், தவெக சார்பில் விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் போன்ற சின்னங்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

மோதிரம்

இந்தச் சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 'மோதிரம் சின்னம்' தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. விரைவில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில், நடிகர் விஜய் தனது கட்சிக்கான இந்தச் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!