ஜாலி!! குற்றாலத்தில் குளிக்க அனுமதி!! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!!

 
குற்றாலம்

இந்தியாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில்   தென்காசி மாவட்டத்தில்   குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பேரருவியிலும்,  ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.

குற்றாலம்

இதனால்  அருவிகளில் குளிக்க  சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.இவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.  மழையின் தாக்கம் மீண்டும்  அதிகரித்தால் பழைய குற்றாலம் அருவிகளிலும் குளிக்க   தடை விதிக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றாலம்
இந்நிலையில்  இன்று காலை முதலே தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதன் அடிப்படையில்  அருவிகளில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளபெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள்  உற்சாகம்  அடைந்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web