அனைத்து கட்சி கூட்டத்தில் அதிரடி... தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு”... !

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதாவது, நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது முற்றிலும் நியாயமற்றது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என 2000ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் உறுதி அளித்தவாறு, இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.
.நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிகை உயர்த்தப்பட்டால், தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இல்லை. அதே நேரத்தில் 50 ஆண்டுகளாக சமூக - பொருளாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையையும் அது சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இக்கூட்டம் தீர்மானிப்பதாக அறிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!