ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு ”கூட்டத்தொடரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் காப்பீடு தொடர்பான மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பக்கூடும். கூடுதலாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என முன்பு வலியுறுத்தியிருந்தார். தற்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலில் இத்தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!