ஸ்டார் ஹோட்டலில் புகுந்து தகராறு... அரிவாள் வெட்டு... பாஜக நிர்வாகி உட்பட 9 பேர் கைது!
கோவையில் சொகுசு ஹோட்டல் முன்பு நடந்த தகராறில், 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜ இளைஞர் அணி நிர்வாகி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிங்காநல்லூரை சேர்ந்த சூர்யா என்பவர், நட்சத்திர ஓட்டல்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவிநாசி ரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் போதையில் தகராறு செய்ததாக ரகுசூரியா மற்றும் அவரது நண்பர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பீளமேட்டில் நடந்த அடுத்த நிகழ்ச்சிக்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினர். சூரியாவின் நிறுவன ஊழியர்களான சூரியா, தேவராஜ் ஆகியோர் கை, தோள்களில் சரமாரியாக வெட்டப்பட்டனர்.

பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் பாஜ ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரகுசூரியா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
