தோனிக்கு தடை விதிச்சிருக்கனும்... சேவாக் அதிரடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தளவிற்கு பிரபலமானதுக்கு தோனியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் தான் உண்மையான ஜெண்டில்மேன் விளையாட்டு என்று 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளின் போது கடந்த தலைமுறை ரசிகர்கள் சொல்லி வந்தார்கள். அதன் பின்னர், ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்க முடியாது. இது பாஸ்ட் புட் காலம் என்று 20-20 போட்டிகளை ரசிக்க துவங்கியது அடுத்த தலைமுறை.

இந்நிலையில், சென்னை கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனியை ஐபிஎல் போட்டிகளில் தடை செய்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்நிலையில், இந்த தொடர்களில் ஒரு சில போட்டிகளில் தோனியை விளையாட விடாமல் தடை செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

IPL

இது குறித்து வீரேந்தர் சேவாக் கூறியிருப்பதாவது, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 25வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், ஹைட் நோபால் கொடுப்பதற்கு நடுவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, கோபமடைந்த தோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவரிடம் விவாதம் செய்தார். 

ஆனால், மூன்றாவது நடுவர் நோபால் கொடுத்தார். எனினும், வெளியில் இருந்த தோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ததன் காரணமாக தோனிக்கு அப்போது 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. உண்மையில், இது போன்ற செய்த தோனியை குறைந்தது 3 போட்டிகளில் விளையாட தடை செய்திருக்க வேண்டும் என்றும் சேவாக் கூறியுள்ளார். 

MSD

மேலும், தோனியைப் போன்று மற்ற கேப்டன்களும் செய்யக் கூடும் என்பதால், அவரை அடுத்த போட்டிகளில் தடை செய்திருக்க வேண்டும். இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிட்செல் சாண்ட்னர் கடைசியாக சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web