நான் திமுககாரனா? உங்கிட்ட கை கட்டி பேசவா? ஆவேசமான திருமா... வெறுத்து ஒதுங்கிய பத்திரிக்கையாளர்கள்!

 
திருமாவளவன்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு நினைவகம் அமைக்கப்படும் என்று, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக, விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் அங்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்பொழுது, வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், "தமிழக அரசு பட்டியலினத்தவர்களுக்கு எதிராக செயல்படவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை நிலவரம் அறிய உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமஜெயம் கொலை வழக்கில் கூட இதுவரை உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை பொறுமையாக கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு என்ன அவசரம்? சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எந்த காலகெடுவும் கிடையாது" என்றார்.

திருமா அன்புமணி

அப்போது, குறுக்கிட்ட ஒரு நிருபர் "நீங்க திமுககாரர் போல் பேசுகிறீர்களே என்று கேட்க திருமாவளவனுக்காக பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ். ஆவேசமடைந்த திருமாவளவன், நிருபரை நோக்கி விரல் நீட்டி, 'நாகரிகம் இல்லாமல் பேச கூடாது. இந்த மாதிரி எல்லாம் பேசுவதை வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். எது உண்மை என்று கேள்வி கேளுங்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். திமுகவை எதிர்த்து எங்களை போல் யாரும் போராட்டம் நடத்தவில்லை. பட்டியலினத்தவர்கள் பிரச்னைக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளில் 10க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தி உள்ளோம். திமுக கூட்டணியில் நாங்கள் இருப்பதால் அநாகரிகமாக பேசக்கூடாது. நான் என்ன திமுககாரனா? இதெல்லாம் அநாகரீகமான பேச்சு" என்று பொங்கினார்.

அன்புமணி ஸ்டாலின்

அதற்கு "நீங்க தான் ஆவேசமாக பேசுகிறீர்கள், கை நீட்டி பேசுகிறீர்கள்’ என சொல்ல, 'அப்ப கை கட்டி பேசவா? நிருபர்கள் முன்பு குனிந்து பேசணுமா? என்று கேட்டு, அங்கிருந்து விருட்டென புறப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் பேட்டி அளித்த இடத்துக்கு விசிக எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி ஆகியோர் வந்து, நிருபர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது தனிக்கதை.

வேங்கை வயல் கேள்விகளை எல்லாம் அதிமுக, பாஜவிடம் கேளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினர். இவங்க தானே பட்டியல் இன மக்களுக்கு பாடுபடுறோம்னு சொல்றாங்க? இவங்ககிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்க முடியும்? சீமான் பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டால், அதில் ஒரு நியாயம் இருக்கும். அடுத்த நிமிஷமே மற்ற பத்திரிக்கையாளர்களிடம் சகஜமாக பேசுவார். இப்படி கேள்விகளுக்கு பயந்து விலகி ஓட மாட்டார். எல்லோருமே சீமானைப் பார்த்து, பத்திரிக்கையாளர்களிடம் அப்படி தான் நடந்து  கொள்வோம்னு நெனைச்சா எப்படி? என புலம்பிய படியே ஏசி அறைக்கு திரும்பினார்கள் தலைமைச் செயலக வாசலில் நின்ற நிருபர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web