‘அமர்க்களம்’ ரீ ரிலீஸ்... தல ரசிகர்கள் கொண்டாட்டம்!
1993-ல் ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ்சினிமாவில் தனக்கென வலுவான இடத்தை பிடித்தார். இவரது 25வது படமாக வெளியான ‘அமர்க்களம்’, காதலும் ஆக்ஷனும் கலந்த சிறந்த படமாக ரசிகர்கள் மனதில் இன்று வரை இடம் பிடித்திருக்கும் படங்களில் ஒன்றாகும்.
An epic love story returns! ❤️
— Sparrow Cinemas (@Sparrowcinemas) October 20, 2025
Celebrating Shalini AK’s birthday with the timeless classic Amarkkalam 💫#Amarkkalam #AjithKumar #Shalini #AK25 #SparrowCinemas #ComingSoon pic.twitter.com/B732gDpEWi
1999-ல் வெளியான இந்தப் படத்தில் ஷாலினி அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். ரகுவரன், ராதிகா, நாசர், அம்பிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். பரத்வாஜ் இசையமைத்த பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதியிருந்தார்; அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி, படத்தின் வெற்றியை மேலும் உயர்த்தின. தமிழில் வெற்றி பெற்ற இந்த படம் பின்னர் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இத்திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக இயக்குநர் சரண் அறிவித்துள்ளார். 26 ஆண்டுகளை கடந்த இந்த கிளாசிக் படம் 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருப்பது அஜித்–ஷாலினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
