ஜூலை 3 முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்... ஏப்ரல் 15ல் முன்பதிவு!

 
அமர்நாத் அமர்நாத்

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் புனித குகைக் கோயிலுக்கான வருடாந்திர யாத்திரை குறித்த முக்கிய அறிவிப்பைத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று வெளியிட்டுள்ளார். ஜம்மு லோக் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி, மொத்தம் 57 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவித்தார்.

யாத்திரையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அனைவரும் தங்களது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள சுமார் 556 குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் வாயிலாக நேரடியாகச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரடியாகச் செல்ல முடியாதவர்கள், அமர்நாத் ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ எளிதாகப் பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், யாத்திரையைச் சிறப்பாக நடத்தவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் ஆலய வாரியம் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆளுநர் மனோஜ் சின்கா குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!