அசத்தல் சாதனை!! 631 வீரர்களின் பெயரை பச்சை குத்தி கின்னசில் இடம் பிடித்த இளைஞர்!!

 
பண்டிட் அபிஷேக் கவுதம்


1999ல்  தொடர்ந்து 85 நாட்கள் நடந்த கார்கில் போரில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போர்  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடத்தப்பட்டது.  கார்கில் போரில் நூற்றுக்கணக்கான இந்திய  வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கார்கில் போர்

இந்த போரில் வீரமரணம் அடைந்த 631 வீரர்களின் பெயரை தனது உடல் முழுவதும் பச்சை குத்தி உத்திரப்பிரதேச இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.இவர் வாரணாசியில் வசித்து வரும்  ஆடை வடிவமைப்பாளர் பண்டிட் அபிஷேக் கவுதம். இதன் மூலம்  கார்கில் போரில் வீரமரணம் அடைந்த  தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்வதாக விளக்கம் அளித்துள்ளார்.

கார்கில் போர்

அத்துடன் நின்று விடாமல் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இதுவரை 559 வீரர்களின் குடும்பங்களை  சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது செயல் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web