அசத்தல் சாதனை!! 12 வயதில் திரைப்படம் இயக்கிய பள்ளி மாணவி !!

 
குண்டான்சட்டி

கும்பகோணத்தில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி  பி.கே.அகஸ்தி. இவர்  குண்டான் சட்டி என்ற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார் மற்றும் தோல் ஏற்றுமதி கவுன்சில் இயக்குநர் செல்வம்   மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய இயக்குநர் பேரரசு , “12 வயதில் ஒரு சிறுமி திரைப்படம் இயக்கியுள்ளது சாதனை தான்.  

குண்டான் சட்டி

இவர்  இயக்குநர் சங்கத்தில் இணைந்தால் சங்கத்திற்கே பெருமை.  எந்த வயதில் இயக்குநரானாலும் எங்கள் சங்கத்தில் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் ” எனக்  கூறியுள்ளார்.  இவரை தொடர்ந்து உரையாற்றிய  இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , “தமிழ் குழந்தைகளுக்கு பிறந்த 2 வருடங்களிலேயே எல்லா அறிவும் வந்துவிடும் . பெற்றோர் அதை பெரும்பாலும்  கவனிப்பதில்லை. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்த்த உடன் திருப்பதியாக இருந்தது. பிரம்மாண்டங்களுக்கு முன்னோடி  ஊமைவிழிகள் தான். எங்களை போன்ற இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பளித்தால் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்க முடியும். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு வழி தெரியவில்லை. எத்தனை மாற்று திறனாளிகள் சினிமா துறையில் உள்ளார்கள்.

குண்டான்சட்டி

பல கோடி ரூபாய் போட்டு படத்தை தயாரித்து விட்டு படத்தின் கதையை தேடி கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களிடம் என்ன கதை சொல்வது.தமிழ் சினிமா எங்கே செல்கிறது என தெரியவில்லை. இயக்குநர்களிடம் கதை கேட்டு நடிக்கும் நடிகர்கள் யாரும் இல்லை. திரைப்படங்கள் இயக்கும் போது, இயக்குநர்கள் மீது நடிகர்கள் நம்பிக்கை வைத்தார்கள் ஆனால் தற்போது நம்பி ‘கையை’ மட்டும் வைக்கின்றனர். தற்போது இருக்கும் படங்களில் கதையே இல்லை. தயவு செய்து சினிமாவை காப்பாற்றுங்கள்.  இல்லையென்றால் குழந்தைகள் படம் எடுக்க வர வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் இயக்குநர்  பி.கே.அகஸ்தி ஆற்றிய உரையில் கொரோனா காலத்தில் அதிகமான புத்தகங்கள் படித்ததால் அதன் தூண்டுதலால் இந்த திரைப்படத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web