16,000 ஊழியர்கள் பணிநீக்கம்… அமேசான் அதிரடி அறிவிப்பு!

 
amazon amazon
 

 

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். நிறுவனத்தின் அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் சேர்த்து, 2023க்கு பிறகு அமேசான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தேவை குறைந்துள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல், மென்பொருள் துறை ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!