இனி ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை நேரம் - தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு!

 
108 108

தமிழகத்தில் 24 மணி நேரமும் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைக்கக் கோரி சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று ஒரு மைல்கல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் பி. முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான விசாரணையில், இருதரப்பு வாதங்களும் அனல் பறந்தன.

"12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதால் கடும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் விபத்துகள் நேரிடுகின்றன. இது தொழிலாளர் சட்டத்திற்கே எதிரானது!" என ஆவேசமாக வாதிட்டனர்.

"நாங்கள் லாப நோக்கமின்றிச் சேவை செய்கிறோம். இந்தியா முழுவதும் 12 மணி நேரப் பணி தான் நடைமுறையில் உள்ளது. ஊழியர்கள் இதை ஏற்றுக்கொண்டுதான் பணியில் சேர்ந்தனர்" என ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் பதில் அளித்தனர்.

ஆம்புலன்ஸ்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளைச் சுட்டிக்காட்டி அதிரடித் தீர்ப்பை வழங்கினார். "தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமான 12 மணி நேரப் பணியை ரத்து செய்து, அதனை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்" என உத்தரவிட்டார். இந்த உத்தரவு அரசிதழில் வெளியான 30 நாட்களில் புதிய 8 மணி நேரப் பணி நடைமுறை அமலுக்கு வரும். புதிய நடைமுறை வரும் வரை, 12 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்குக் கூடுதல் நேரத்திற்கான ஊதியத்தைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

ஆம்புலன்ஸ்

பெண் பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பல ஆண்டு காலக் கனவு நனவாகியுள்ளது. "உயிரைக் காப்பவர்களின் உரிமையும் காக்கப்பட வேண்டும்" எனச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!