பிரபல நடிகை அமீஷாவுக்கு ஜாமீன் மறுப்பு பிடிவாரண்ட்!
அமீஷா படேல் மீது மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மொராதாபாத் நகரை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் நடனமாட பணம் பெற்றும் அவர் கலந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்காக 11 லட்சம் முதல் 14.5 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நடிகை மும்பையிலிருந்து டெல்லி வந்தபோதும், அவரது குழு கூடுதல் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் வழங்க மறுத்ததால் அவர் பாதியிலேயே திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணம் திருப்பித் தர வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும் நடிகை ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வரும் மார்ச் 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
