அமெரிக்கா குடும்ப விழாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

 
america

அமெரிக்காவின் கலிபொர்னியா மாநிலம் ஸ்டாக்டன் நகரில் நடைபெற்ற குடும்ப விழா நேரத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் விருந்து மண்டபத்தில் நடந்த விழா மகிழ்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு செய்தார். இதனால் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சிறுவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் துளைக்காயங்களுடன் ரத்தத்தில் கிடந்தனர். அருகிலிருந்தோர் துாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் லூசில் அவென்யூ பகுதியில் மாலை 6 மணியளவில் நடந்தது. தகவலறிந்து வந்த சான் ஜோவாகின் கவுண்டி ஷெரிப் படையினர் விருந்து மண்டபத்தை சுற்றிவளைத்து விசாரணை தொடங்கினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்றும் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் மிகக் குறைவு என்றும் ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஹீதர் ப்ரெண்ட் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக இருந்த குடும்ப விழா கண நேரத்தில் துயரமாக மாறி கலிபோர்னியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!