அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சூப்பரான தகவல்... விசாவில் புதிய திருத்தம்!

 
H1-B

மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் நிலைமை மோசம். ஏனெனில் அமெரிக்காவில் ஏராளமான வெளிநாட்டினர் ஹெச்1 பி விசா (H1-B)-வில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 

ஏற்கனவே வேலை இழந்தவர்களில் பலர் ஹெச்1 பி விசா (H1-B) மூலம் அமெரி்க்காவில் உள்ளனர். மற்றவர்களும் பதற்றத்தில் உள்ளனர். அதாவது, வேலை இழந்த அனைவரும் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேரவேண்டும். தவறினால் அவர்கள் அமெரிக்காவில் இருக்க முடியாது. சொந்த நாட்டுக்கே திரும்பவேண்டிய கட்டயாம் ஏற்படும். 

H1-B

ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஹெச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள் அதிகம் உள்ளதால் பணிநீக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்தவர்கள் இந்தியர்கள்தான். எனவே அமெரிக்காவில் வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள அளிக்கப்படும் கால அவகாசம் 60 நாட்களுக்குப் பதிலாக 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

H1-B

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழுவும் இதையே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்புக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (USCIS) விரைவில் ஹெச்1 பி விசா தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேலை இழந்தவர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டால் அதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கு மேலான இந்திய மற்றும் சீன ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web