அமெரிக்கா விவகாரம்… மோடி சரணடைந்தார் என காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!

 
மோடி ட்ரம்ப்

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பதிவில், ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறதா என்பதை தற்போது அமெரிக்கா கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ரஷிய எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது உறுதியாக இருந்தால், உடனடியாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “என் பெயர் நரேந்திர், என் வேலை சரணடைதல்” என பிரதமரை நேரடியாக விமர்சித்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், இதற்கு மத்திய அரசின் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!