17 கோடி பீப்பாய் எண்ணெய் விடுவித்த அமெரிக்கா!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடந்து வருவதைத் தொடர்ந்து உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியை ஈரான் மூடிவிட்டது. இதனையடுத்து உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பல கப்பல்கள் அந்தப் பகுதியில் செல்ல தயங்குகின்றன. இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியதால் பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையை சமாளிக்க அவசர நடவடிக்கையாக டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா தனது அவசரகால கையிருப்பில் இருந்து 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தையில் விடுவித்துள்ளது. அமெரிக்காவுக்கு மொத்தமாக 71 கோடி பீப்பாய் எண்ணெயை சேமிக்கும் திறன் உள்ளது. தற்போது அதில் சுமார் 41 கோடி பீப்பாய் எண்ணெய் கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
