ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் … ட்ரம்ப் பதிலால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு!
அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக பராக் ஒபாமா அறியப்படுகிறார். இந்நிலையில், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறி ரீதியாக விமர்சிக்கும் வீடியோ ஒன்று தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இந்த பதிவு வெளியானதும் அமெரிக்க மக்களிடமும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் இந்த பதிவை கண்டித்தனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அந்த வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை என்றும், அதன் ஆரம்ப பகுதியை மட்டும் பார்த்ததாகவும் கூறினார். அது தேர்தலில் இயந்திரங்கள் மூலம் நடந்ததாக கூறப்படும் வாக்கு மோசடி தொடர்பானது என்று நினைத்து பகிர்ந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தன்னால் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும், அதனால் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த வீடியோ இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ட்ரம்பின் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் ஒபாமா மற்றும் அவரது மனைவியின் முகங்கள் குரங்குகளுடன் ஒப்பிட்டு காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், பகிரப்பட்ட 12 மணி நேரத்துக்குள் அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பணியாளர் தவறுதலாக பகிர்ந்ததாக முன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
