பாக்தாத்தில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்... பெரும் பரபரப்பு!

 
பத்திரிக்கையாளர் பத்திரிக்கையாளர்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன்   மர்ம நபர்களால் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு ஆபத்தான போர்முனைகளுக்கு நேரடியாகச் சென்று துணிச்சலுடன் செய்தி சேகரிப்பதில் புகழ்பெற்றவர் ஜெல்லி கிட்டில்சன். தற்போது ஈராக்கில் நிலவி வரும் ஐஎஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றங்கள் குறித்து கள ஆய்வு செய்து வந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நேற்று ஏப்ரல் 1ம் தேதி பாக்தாத்தின் மையப்பகுதியான அல் சடோன்  சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவரை வழிமறித்துக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறிய இந்தக் கடத்தல் சம்பவம், ஈராக்கில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. கடத்தப்பட்ட ஜெல்லி கிட்டில்சனை மீட்க ஈராக் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் அந்தப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், ஈரான் ஆதரவு பெற்ற ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என ஈராக் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் அரசியல் மோதல்களின் பின்னணியில் இந்தப் பத்திரிகையாளர் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கத் தூதரகம் ஈராக் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதுடன், தனது குடிமகளைப் பாதுகாப்பாக மீட்க அனைத்து ராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாக்தாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!