இந்தியாவை கிண்டல் செய்த அமெரிக்க வீரர்.. ரிங்கிற்குள் வைத்து பந்தாடிய நீரஜ் கோயத் - பாட்டில் வீச்சு மோதலால் பரபரப்பு!

 
நீரஜ் கோயத்

துபாயில் நடந்த குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிய அமெரிக்க வீரரின் முகத்திலேயே குத்துவிட்டு, ரிங்கிற்குள் வைத்துத் தரமான பதிலடி கொடுத்துள்ளார் இந்திய வீரர் நீரஜ் கோயத். விளையாட்டுப் போட்டிக்கு முன்பே இந்தியாவையும், இங்குள்ள குத்துச்சண்டை வீரர்களின் தரத்தையும் மிகவும் ஏளனமாகப் பேசி வம்பிழுத்த அமெரிக்க வீரர் அந்தோணி டைலருக்கு, நீரஜ் கொடுத்த 'பஞ்ச்' இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெற்ற 'மிஸ்ஃபிட்ஸ் பாக்சிங்' தொடரில் இந்த மோதல் அரங்கேறியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே வாய்க்கொழுப்புடன் பேசிய அந்தோணி டைலரை, 6 சுற்றுகள் கொண்ட போட்டியில் நீரஜ் கோயத் நிலைகுலைய வைத்தார். நீரஜின் மின்னல் வேகக் குத்துக்களைச் சமாளிக்க முடியாமல் அந்தோணி திணறினார். இறுதியில் நடுவர்கள் ஒருமித்த கருத்துடன் நீரஜ் கோயத் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ரிங்கிற்குள் பதிலடி கொடுத்ததோடு நீரஜின் வேட்டை முடிந்துவிடவில்லை.

நிஜமான பரபரப்பு போட்டிக்குப் பிறகு மருத்துவ அறையில்தான் (Medical Room) தொடங்கியது. தோல்வியடைந்த விரக்தியில் இருந்த அந்தோணி டைலர், நீரஜிடம் கைகுலுக்கச் சென்றார். ஆனால், இந்தியாவை இழிவுபடுத்திய ஒருவரிடம் கைகுலுக்க முடியாது என்று நீரஜ் மறுத்துவிட்டார். "உனக்கு பாக்சிங் பற்றி என்ன தெரியும்? நீ பேசுவதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம்" என்று முகத்திற்கு நேராகவே நீரஜ் விளாசினார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க வீரர் அந்தோணி, கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை நீரஜ் மீது வீசி கலாட்டா செய்தார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து, அந்தோணியை வெளியேற்றினர்.

இந்த மோதல் குறித்து ஆவேசமாகப் பேசிய நீரஜ் கோயத், "இந்த அமெரிக்க ஆள் என்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களையும் குறைத்து மதிப்பிட்டான். இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நான் முன்பே சொன்னது போல, 'இந்தியா தான் உங்கள் அப்பா'. இந்தியர்கள் எதையும் சொன்னால் அதைச் செய்து காட்டுவார்கள்" என்று மார்தட்டிப் பேசியுள்ளார். இந்தியாவைப் பெருமைப்படுத்திய நீரஜின் இந்த வெற்றி மற்றும் அவர் கொடுத்த பதிலடியை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!